Android மற்றும் iPhone செயலிகள்

யாழ்ப்பாணத்தில் மொபைல் செயலி உருவாக்கம்

உங்கள் வாடிக்கையாளர்கள் மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் செயலிகளையும், உங்கள் ஊழியர்கள் தினமும் பயன்படுத்தும் செயலிகளையும் யாழ்ப்பாணத்திலிருந்தே உருவாக்கி வெளியிடுகிறோம்.

  • LKR 120,000 முதல்
  • Android மற்றும் iPhone
  • App Store, Google Play வெளியீடு
  • 3 மாத இலவச உதவி
Read this page in English

உங்கள் வணிகத்துக்கு உண்மையில் செயலி தேவையா?

வாடிக்கையாளர்கள் அடிக்கடி ஓடர் செய்தால், அல்லது உங்கள் ஊழியர்கள் தினமும் பயன்படுத்தினால், செயலி நல்ல பலனைத் தரும். எப்போதாவது மட்டும் தேவைப்படுமானால் ஒரு நல்ல இணையதளமே போதுமானதாக இருக்கலாம். எது சரி என்பதை நேர்மையாகச் சொல்வோம்.

யாழ்ப்பாணத்தில் RR Café வணிகத்துக்கு ஓடர் செய்யும் செயலியையும், Evergreen Celebrations நிறுவனத்துக்கு iOS, Android செயலிகளையும் உருவாக்கியுள்ளோம்.

நாம் உருவாக்கும் செயலிகள்

  • ஓடர் செய்யும் செயலிகள்

    உங்கள் பொருட்களைப் பார்த்து, கைபேசியிலிருந்தே வாடிக்கையாளர்கள் ஓடர் செய்யலாம்.

  • விநியோகச் செயலிகள்

    ஒவ்வொரு விநியோகத்தையும் ஆரம்பம் முதல் இறுதிவரை கண்காணிக்கலாம்.

  • ஊழியர் செயலிகள்

    வேலைகளை ஒதுக்கவும், வேலை நேரத்தைப் பதிவுசெய்யவும் உதவும்.

  • நிர்வாகப் பகுதி

    பொருட்கள், ஓடர்கள், வேலைகளை ஒரே இடத்திலிருந்து நிர்வகிக்கலாம்.

  • வாட்ஸ்அப் பில்கள்

    செயலியிலிருந்தே வாடிக்கையாளரின் வாட்ஸ்அப்புக்கு பில் அனுப்பலாம்.

  • தமிழில் செயலி

    உங்கள் பயனர்களின் மொழியில் செயலியை அமைக்கலாம்.

நீங்கள் ஏன் எங்களை நம்பலாம்

  • பதிவுசெய்யப்பட்ட நிறுவனம்

    SiTechra (Pvt) Ltd, பதிவு இலக்கம் PV 00338682. இது இலங்கை கம்பனிகள் பதிவாளர் அலுவலகத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

  • 50க்கும் மேற்பட்ட திட்டங்கள்

    இலங்கையிலும் வெளிநாடுகளிலும் உள்ள வாடிக்கையாளர்களுக்காக இணையதளங்கள், செயலிகள், மென்பொருட்களை உருவாக்கியுள்ளோம்.

  • எழுத்துமூல விலைமனு

    வேலை தொடங்கும் முன்பே முழு விலையும் கால அளவும் உங்களுக்குத் தெரியும்.

FAQ

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

WhatsApp-இல் கேளுங்கள்

ஒரு மொபைல் செயலிக்கு எவ்வளவு செலவாகும்?

SiTechra செயலிகள் LKR 120,000 முதல் தொடங்குகின்றன. அம்சங்களைப் பொறுத்து விலை மாறும். வேலை தொடங்கும் முன் எழுத்துமூல விலைமனு தருவோம்.

செயலியை உருவாக்க எவ்வளவு காலம் எடுக்கும்?

பெரும்பாலான செயலிகள் 3 முதல் 10 வாரங்களில் தயாராகும். திரைகளின் எண்ணிக்கையையும் அம்சங்களையும் பொறுத்து இது மாறும்.

App Store, Google Play இல் வெளியிட்டுத் தருவீர்களா?

ஆம். வெளியீட்டு வேலைகளை நாம் கவனித்துக்கொள்வோம். Apple, Google கணக்குகளுக்கான கட்டணங்கள் தனியாக இருக்கும்.

தொடங்கத் தயாரா? இலவச விலைமனு பெறுங்கள்.

உங்கள் தேவையை வாட்ஸ்அப்பில் சொல்லுங்கள். யோசனைகளையும் தெளிவான திட்டத்தையும் நிலையான எழுத்துமூல விலைமனுவையும் இலவசமாகத் தருவோம்.